மண் வெட்டியால் தாக்கியதில் ஒருவர் பலி : மனைவியின் கள்ளத்தொடர்பால் நேர்ந்த கதி

0
206
Wife illegal relationship person murder hatton 

(Wife illegal relationship person murder hatton)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை யதன்சைட் தோட்ட பகுதியில் ஒருவர் மண் வெட்டியால் தாக்கி கொலை செய்யபட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (01) இரவு 9.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
தாக்குதலை மேற்கொண்டவரின் மனைவிக்கும் சம்பத்தில் பலியான நபருக்குமிடையில் தகாத உறவுமுறை ஒன்று இருந்துள்ளது. நேற்றிரவு மரக்கறி தோட்டத்தில், தனது மனைவி கள்ளக் காதலுடன் இருப்பதை கணவன் அவதானித்துள்ளார். உடனே அங்கு சென்று இருவரையும் மண்வெட்டியால் தாக்கியுள்ளார்.

இதன் போது சம்பவ இடத்தில் கள்ள காதலன் பலியானதோடு, காயமடைந்த மனைவி காயங்களுடன் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் பலியான 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான எஸ். ரகு என்பவர் கொழும்பு பகுதியில் தொழில் புரிந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நீதவானின் மரண விசாரனைகளின் பின்னர் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கபட உள்ளதாகவும் சந்தேக நபர் இன்று (02) ஹட்டன் நீதாவன் முன்னிலையில் அஜர்படுத்தபட உள்ளதாகவும் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Wife illegal relationship person murder hatton

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here