சித்தம் கலங்க வைக்கும் பிள்ளையானின் கொலைப்பட்டியல் விபரம்!

0
341
Former Eastern Chief Minister Chandrakanthan Murder List

(Former Eastern Chief Minister Chandrakanthan Murder List)

சிவநேசதுரை சந்திரகாந்தனால் (பிள்ளையானால்) கொலை செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரம் விபரம் வெளியாகியுள்ளதால் பெரும் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளாயான் விலக்கப்பட்ட பின்னர் , கிழக்கு மாகாண முதலமைச்சராக விளங்கிய பிள்ளையான் பல வகைப்பட்ட கொலை சம்பவங்களுடன் தொடர்புபட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.

Image result for Former Eastern Chief Minister Chandrakanthan Murder List

மனிதவுரிமை ஆணைக்குழுவின் முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் வெளிவந்துள்ள தகவல்களின் அடிப்படையில் பிள்ளையானின் கொலைப்பட்டியல் இதோ:

01. அரியநாயகம் சந்திரநேரு, அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர். 07/02/2005 அன்று கொலை செய்யப்பட்டார்.

02. E.கௌசல்யன், மட்டக்களப்பு – அம்பாறை அரசியல் துறை பொறுப்பாளர், தமிழீழ விடுதலைப் புலிகள். 07/02/2005 அன்று கொலை செய்யப்பட்டார்.

03. தர்மரட்ணம் சிவராம், சிரேஷ்ட ஊடகவியலாளர். 28/04/2005 அன்று கொலை செய்யப்பட்டார்.

04. ஐயாத்துரை நடேசன், சிரேஷ்ட ஊடகவியலாளர். 31/05/2004 அன்று கொலை செய்யப்பட்டார்.

05. வன்னியசிங்கம் விக்னேஸ்வரன், திருகோணமலை மாவட்ட தமிழர் அமைப்பின் உறுப்பினர். 07/04/2006 அன்று கொலை செய்யப்பட்டார்.

07. சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத், உபவேந்தர் கிழக்கு பல்கலைக் கழகம். 15/12/2006 அன்று கடத்தப்பட்டு பொலன்னறுவை மாவட்டம், செவனப்பிட்டி, தீவுச்சேனை என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டார்.

08. ஜோசப் பரராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர். 25/12/2005 அன்று மட்/புனித மரியன்னை இணைப்பேராலயத்தினுள் வைத்து கொலை செய்யப்பட்டார்.

09. வர்ஷா ஜூட் என்னும் 6 வயது சிறுமி, 11/03/2009 அன்று திருகோணமலையில் கடத்தப்பட்டு, கப்பம் கோரப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

10. சதீஷ்குமார் தினூஷிகா என்னும் 8 வயது சிறுமி, 28/04/2009 அன்று மட்டக்களப்பு, பூம்புகார் என்னும் இடத்தில் வைத்து கடத்தப்பட்டு, கப்பம் கோரப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைப்பட்டியல் தொடர்பில் பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ள நிலையில் , சில தரப்புகள் பிள்ளையானை கிழக்கின் பலம் வாய்ந்த அரசியல் சக்தியாக மாற்ற வேண்டும் என்னும் முனைப்பில் செயலாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here