ஐபிஎல் தடையை உடைக்க போறியா ? இல்லை பயந்து கொண்டே மாட்ச் பார்க்கப்போறியா? ஜிவி குமுறல்!

0
428
GV Prakash Tweets Against IPL Match Restrictions

(GV Prakash Tweets Against IPL Match Restrictions)

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று சிஎஸ்கே அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

இந்த போட்டியை நடத்த விடமாட்டோம் என ஒருசில அரசியல் கட்சிகள் மிரட்டல் விடுத்துள்ளன.

இருப்பினும் திட்டமிட்டபடி போட்டி நடந்தே தீரும் என்றும் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் உறுதியாக கூறிவிட்டது.

மைதானத்திற்கு வரும் பார்வையாளர்கள் பேனர்கள், கொடிகள், செல்போன்கள், பைனாகுலர், பட்டாசுகள், கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள் கொண்டு வரக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

குடிக்க தண்ணீர் கூட கொண்டு வரக்கூடாது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், இத்தனை கட்டுப்பாடுகளை மீறி எதற்கு ரசிகர்கள் கிரிக்கெட் பார்க்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Image result for IPL Chepauk Ground

இந்நிலையில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ், அவர்களின் அடக்குமுறைக்கு அடிபணிந்து கிரிக்கெட்டை பார்க்கப் போறியா?, இல்ல நீ நினைக்கும் கருத்தை வெளிப்படையாக, சுதந்திரமாக சொல்ல முடியலன்னு இந்த விளையாட்ட தவிர்க்கப் போறியா? இல்ல தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க சொல்லப்போறியா..? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here