நடிகை தபுவிடம் விமான நிலையத்தில் ரசிகர் செய்த சேட்டை

0
68
Fan harassment actress tabu tamil cinema gossip  

(Fan harassment actress tabu tamil cinema gossip )

இந்தி பட உலகின் பிரபல கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர், தபு. ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்,’ ‘சினேகிதியே’ ஆகிய தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார். இப்போது அவர், குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.

1998-ம் வருடம் இவர், ‘ஹம் சாத் சாத் ஹைன்’ என்ற இந்தி படத்தில் நடித்தபோதுதான் மான் வேட்டை வழக்கில், சல்மான்கான் சிக்கினார். 19 வருடங்கள் கழித்து அந்த வழக்கில் சாட்சி சொல்வதற்காக தபு, ஜோத்பூர் விமான நிலையத்துக்கு சென்றார்.

அப்போது ஒரு ரசிகர், தபுவிடம் குறும்பு செய்தார். விமான நிலையத்தில் தபு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவருடைய பாதுகாவலர்களையும் மீறி ஒரு ரசிகர் தபுவை நெருங்கி குறும்பு செய்ததாக கூறப்படுகிறது. அவரை பாதுகாவலர்கள் பிடித்து தலைக்கு மேல் தூக்கி வீசினார்கள்.

இந்த சம்பவத்தால் தபு அதிர்ச்சி அடைந்தார். அவருடன் வந்த நடிகைகள் சோனாலி, நீலம் ஆகியோரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

சம்பவம் பற்றி அந்த மூன்று பேரும் கூறும்போது, “நடிகைகளுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. நடிகைகளும் மனிதர்கள்தான் என்பதை சில ரசிகர்கள் மறந்து விடுகிறார்கள். அளவுக்கு அதிகமான கற்பனையில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே இதுபோன்ற குறும்புகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களை எப்படி திருத்துவது? குறும்பு செய்த அந்த ரசிகருக்கும் குடும்பம் இருக்கும். சகோதரிகள் இருப்பார்கள். அவர்களிடம் அவர் இப்படி நடந்து கொள்வாரா?” என்று ஆவேசமாக கேட்டார்கள்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Fan harassment actress tabu tamil cinema gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here