பெண் நிருபரின் கன்னத்தை தட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் : கொந்தளிக்கும் தமிழக மக்கள்

0
762
Banwarilal Purohit torched women journalist cheek latest gossip

(Banwarilal Purohit torched women journalist cheek latest gossip )

முகத்தை பல முறை கழுவிவிட்டேன். இருப்பினும் அந்த உணர்வு போகவில்லை. மிகவும் கோபமாக உள்ளது மிஸ்டர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என்று அந்த பெண் நிருபர் ட்வீட்டியுள்ளார். கணித பேராசிரியை நிர்மலா தேவி அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகள் 4 பேரை படுக்கைக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராவிதமாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெண் நிருபர் ஒருவரின் கன்னத்தை தட்டினார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் நான் கேள்வி கேட்டேன். அவர் பதிலாக என் அனுமதி இல்லாமல் என் கன்னத்தை தட்டினார் என்று அந்த பெண் நிருபர் ட்வீட்டியுள்ளார்

Banwarilal Purohit torched women journalist cheek latest gossip

துரதிருஷ்டவசமானது மட்டும் அல்ல . அரசியல் சட்ட பதவியில் இருப்பவரின் தகுதிக்கு துளியும் ஏற்புடையது அல்ல! என்று பெண் நிருபரிடம் ஆளுநர் நடந்து கொண்டது பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்.

என்ன தான் வயதில் பெரியவராக இருந்தாலும் தவறான நோக்கத்தில் தொடாவிட்டாலும் ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவர் கன்னத்தில் தட்டியது தவறு என்கிறார் திமுக எம்.பி. கனிமொழி.

முகத்தை பல முறை கழுவிவிட்டேன். இருப்பினும் அந்த உணர்வு போகவில்லை. மிகவும் கோபமாக உள்ளது மிஸ்டர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித். பாராட்ட நினைத்து அப்படி செய்திருக்கலாம், தாத்தாவாக நினைத்து. ஆனால் நீங்கள் செய்தது தவறு என்று அந்த பெண் நிருபர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Banwarilal Purohit torched women journalist cheek latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here