மகள் வயது பெண்ணுடன் எதற்காக திருமணம் : நடிகர் விளக்கம்

0
1005
Milind Soman explain younger age ankita wedding latest gossip

(Milind Soman explain younger age ankita wedding latest gossip)

மகள் வயது பெண்ணுடன் திருமணம் ஏன் என்று நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன் தெரிவித்துள்ளார். 52 வயதாகும் நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன் தனது மகள் வயது பெண்ணான அங்கிதா கொன்வரை(26) இந்த மாத இறுதியில் திருமணம் செய்யப் போகிறார். இந்நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.

 

நாங்கள் ஒன்றும் பிரியவில்லை, காதலித்துக் கொண்டு தான் இருக்கிறோம் என்பதை கூறுவது போன்று புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் மிலிந்த் சோமன்.

Milind Soman explain younger age ankita wedding latest gossip

மகள் வயது பெண்ணுடன் காதல், திருமணமா என்கிறார்கள். எனக்கு மற்றவர்கள் பேசுவதை பற்றி கவலை இல்லை. அவர்களுக்கு எங்களை பற்றி எதுவும் தெரியாது என்கிறார் மிலிந்த்.

மிலிந்த் சோமன் அங்கிதாவை முதல்முறையாக பார்த்தது சென்னையில் உள்ள நைட்கிளப் ஒன்றில் வைத்து தானாம். பார்த்த உடனே அங்கிதாவை பிடித்துப்போய் தனது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். வழக்கமாக நைட் கிளப் போகும் பழக்கம் இல்லாத அவர் அன்று அங்கு சென்றது நல்லதாகிவிட்டது என்று மிலிந்த் தெரிவித்துள்ளார்.

அங்கிதா மிலிந்த் நம்பர் கொடுத்த மறுநாளே கால் செய்து பேசியுள்ளார். அப்படியே பேசிப் பேசி நட்பாகி காதலாகியுள்ளது. 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து காதலித்து வருகிறார்களாம். மிலிந்த் சோமனுடன் சேர்ந்த பிறகு அங்கிதாவும் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Milind Soman explain younger age ankita wedding latest gossip 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here