அவுஸ்திரேலியாவில் குழந்தையை மீட்ட நாய்!

0
254
Dog rescue baby Australia

அவுஸ்திரேலியாவின் ஒரு காட்டுப்பகுதியில் இருந்த புதரில் மாட்டிக் கொண்ட 3 வயதுக் குழந்தையை இரவு முழுவதும் நாயொன்று பாதுகாத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.Dog rescue baby Australia

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தைச் சேர்ந்த 3 வயதான ஆரோரா என்ற குழந்தை வீட்டை விட்டு வெளியேறி சுமார் 2Km தூரத்திலுள்ள காட்டுப் பகுதியிலுள்ள புதரில் சிக்கிக் கொண்டது. அக் குழந்தை மேல் பாசம் கொண்ட அவ் வீட்டிலே வளரும் மாக்ஸ் என்ற நாய் குழந்தையுடன் சென்றுள்ளது.

குழந்தையை காணாமற் போனதை அறிந்த பெற்றோர் அங்குள்ள மலைப் பகுதியில் தேடியுள்ளனர். மேலும் அக் குழந்தையை தேடும் பணியில் 100 க்கும் மேற்பட்ட அவசர காலப் பணியாளர்களும், தன்னார்வலர்களும் ஈடுபட்டனர். அத்துடன், அக் குழந்தையை மீட்க 2 ஹெலிகொப்டர்களும் பயன்படுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அக் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது.

இது குறித்து அக்குழந்தையின் பாட்டி “அரோரா அழும் சத்தம் கேட்டது. உடனே நான் மலையை நோக்கி நான் சென்றேன். மலையின் உச்சியை அடைந்ததும் எங்கள் மாக்ஸ், அரோரா இருக்கும் இடத்திற்கு என்னை அழைத்து சென்றது” எனத் தெரிவித்தார்.

குறித்த நாயான மாக்ஸ் ஐ பாராட்டிய பொலிஸார், அதற்கு கௌரவ பொலிஸ் நாய் எனப் பெயர் வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதுடன், குழந்தையை இரவு முழுவதும் பாதுகாத்த மாக்ஸை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here