நடு வீதியில் நடிகையின் ஆடையை கிழித்த நபர்கள்!

0
579
Drew actress's dress middle street

மோட்டார் சைக்கிளில்(scooter) சென்ற ஒரு மொடலின் ஆடையை இழுத்து இரு இளைஞர்கள் பிரச்சினை செய்துள்ளனர். இதனால் அவர் கீழே விழுந்துள்ளதுடன் காயமடைந்துள்ளார்.Drew actress’s dress middle street

இந்தியாவின் மத்திய பிரதேசத்திலுள்ள இந்தூரைச் சேர்ந்த மொடல் மற்றும் நடிகையான சர்மா ஆகர்ஷி மொடெலிங் ஆக வேலை செய்து வருகிறார். அத்துடன் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களிலும் நடித்து வருகிறார். அடிக்கடி Blog எழுதும் பழக்கம் கொண்டவர் என்பதும் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில், ஏப்ரல் 22 ம் திகதி இரவு ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு விட்டு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது நாடு வழியில் அவரை இரு இளைஞர்கள் பின் தொடர்ந்து, அவரின் ஆடையை இழுத்து கலாட்டா செய்துள்ளனர். அத்துடன் ஆபாசமாக பேசியும் உள்ளனர்.

ஆனாலும் துணிச்சலுடன் ஷர்மா ஆகர்ஷி மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த இரு இளைஞர்களையும் பிடிக்க முயன்றுள்ளார். அதற்குள் அவரது ஸ்கூட்டர் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதனால் அவருக்கு கால்களில் காயம் ஏற்பட்டதுடன், குறித்த இரு இளைஞர்களும் தப்பி ஓடி விட்டனர். அச்சமயம் பின்னால் வந்த நபர் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். இச்சம்பவம் இந்தூரில் உள்ள பிரபல வணிக வளாகம் முன் நடந்துள்ளது.

அவர் இது தொடர்பாக தனது சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு நியாயம் கோரியுள்ளார்.

அவர் மேலும், “நான் அணிந்த ஆடையை இழுத்து அவர்கள் வம்பு செய்தனர். நான் அவர்களை பிடிக்க முற்பட்டபோது கீழே விழுந்து விட்டேன்,” எனத் தெரிவித்தார்.

என்னைக் காப்பாற்றிய நபர் என் பாவாடையை பார்த்து தான் வம்பிழுத்ததாக கூறினார். என் ஆடையை பற்றி யாரும் எனக்கு சொல்ல தேவையில்லை. எந்த ஆடையை அணிய வேண்டும் என எனக்குத் தெரியும். இது தொடர்பாக காவற்துறையில் புகார் கொடுக்க போகிறேன் என மேலும் தெரிவித்தார்.

அத்துடன் அப்பகுதியில் CCTV எதுவும் இல்லை. ஆனாலும் இதை விடப்போவதில்லை எனவும் கூறினார்.

மேலும், இது தொடர்பாக புகார் வந்தால் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என அப்பகுதி பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here