IPL லில் அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர்!

0
274
IPL Jofra Archer record history

இந்த வருட IPL லில், அறிமுகமான போட்டியிலேயே சிலர் அசத்தியிருக்கிறார்கள். அந்த சிலரில் குறிப்பிடத்தக்கவர், ஜோப்ரா ஆர்ச்சர் (Jofra Archer). இந்தக் ’கருப்புத் திறமை’யை பாதுகாத்து வைத்திருக்கிறது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி!IPL Jofra Archer record history
இங்கிலாந்து நாட்டு அணியில் எளிதாக சேர்ந்துவிட முடியுமா என்ன? இங்கிலாந்து குடியுரிமை பெற்று அங்கு 7 வருடம் வாழ்ந்தால் மட்டுமே, தேசிய அணிக்காக கிரிக்கெட் ஆட முடியும் என்பது அங்குள்ள Law. அந்த ஏழு வருடம் பூர்த்தியாக, ஆர்ச்சருக்கு இன்னும் 4 வருடம் இருக்கிறது.

அதாவது 2022-ல்தான் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அதுவரை அவர் ஃபார்மில் இருக்க வேண்டும் என்பது இன்னும் முக்கியம்.

இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் சுசக்ஸ் அணிக்காக 2016- முதல் ஆடிவரும் ஆர்ச்சர் பிரிட்டீஷ் குடியுரிமை பெற்றிருக்கிறார். அங்கிருந்து அவுஸ்திரேலியாவின் பிக்பாஷ் போட்டிக்கு அழைக்கப்பட்டார்.

இந்த வருட பிக்பாஷ் போட்டியில் ஆர்ச்சர்தான் அதிகம் பேசப்பட்ட கிரிக்கெட் வீரர். அங்கு 17 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிற ஆர்ச்சரின் எக்கனாமி ரேட் 7.88.

இவரது அடுத்த ஆசை, இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக ஆட வேண்டும் என்பது. ஏன் இந்த இங்கிலாந்து ஆசை? 2014-ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான அணியில் ஆர்ச்சரை சேர்க்கவில்லை மேற்கிந்திய தீவுகள். இதனால் கோபமடைந்த ஆர்ச்சர் பிளைட் பிடித்துவிட்டார் இங்கிலாந்துக்கு.

‘உடனடியா எதுவும் செஞ்சிட முடியாதுன்னு தெரியும். எனக்கு அவசரம் இல்லை. இந்த காலகட்டத்துல கவுண்டி கிரிக்கெட், டி20 லீக் போட்டிகளில் விளையாடி அனுபவத்தை அதிகமா வச்சுக்கணும்’ என்கிற ஆர்ச்சர், ஐபிஎல் போட்டியில் ஒரு டார்க்கெட் வைத்திருக்கிறார்.

‘முதல்ல சில போட்டிகளில் விளையாட முடியாம போச்சு. ஆனா, இந்த வருட IPL போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவனா நான் இருக்கணும்னு முடிவு பண்ணியிருக்கேன். இது முடியுமான்னு தெரியல. அடுத்து நடக்கிற ஒவ்வொரு போட்டியிலயும் இரண்டு அல்லது மூணு விக்கெட்டை கண்டிப்பாக வீழ்த்தணுங்கறதுதான் என் டார்க்கெட்’ என்கிறார்.

’மும்பைக்கு எதிரான போட்டிக்குப் பிறகு உங்க மேல எதிர்பார்ப்பு அதிகரிச்சிருக்கே?’ என்று கேட்டால், ’இது ஒண்ணும் புதுசில்ல. இது என்னை பாதிக்காது. T20 போட்டிகள்ல நிறைய விஷயங்கள் அதிரடியா மாறியிருக்கு. ஆனா, என் நோக்கம் ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைக்கணும். அதோட என் Fitness லயும் கவனம் செலுத்தணும்’ என்கிறார் இந்த ஆர்ச்சர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here