பிச்சைக்காரரிடமிருந்து கொள்ளையடித்த நபர்!

0
293
person rob beggar money

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே, மர்ம நபர் ஒருவர், பார்வையற்ற பிச்சைக்காரரிடமிருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.person rob beggar money

சேலம் மாநகரத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தின் அருகே, கண்தெரியாத நபர் ஒருவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவருக்கு உதவி செய்வதுபோல் வந்த மர்ம நபர், அவரிடமிருந்த பணத்தை பறிக்க முயன்றுள்ளார். அதை வேறொரு பார்வையற்ற பிச்சைகாரர் தடுக்க முற்பட்டுள்ளார். இதனால் இருவருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதனை அருகில் நின்ற பலர் வேடிக்கை பார்த்தார்களே தவிர, யாரும் தடுக்க முன்வரவில்லை. பின்னர் பார்வையற்ற பிச்சைக்காரரிடம் இருந்த பணத்தை பறித்துவிட்டு, குறித்த நபர் ஓட்டம் பிடித்தார். இந்த சம்பவம் தொடர்பான CCTV காட்சி வெளியாகி உள்ள நிலையில், இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here