அந்த ஆசை வந்து விட்டால் நான் நடிக்க மாட்டேன் – சாய் பல்லவி!

0
306
Sai Pallavi studied doctor

டாக்டருக்கு படித்துள்ள சாய் பல்லவி பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஒரே நேரத்தில் படங்களிலும் நடித்துக் கொண்டு, மருத்துவத்தையும் பார்க்க முடியாது என்று நினைக்கிறார். அதனால் படித்த படிப்புக்கு வேலை செய்யாமல் நடிகையாக மட்டும் உள்ளார். அவர் டாக்டருக்கு படித்தது பற்றி வெளியில் பெரிதாக சொல்வது கூட இல்லை. Sai Pallavi studied doctor

AL. விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள தியா படம் வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் ஹீரோ நாகசவுரியா. நாகசவுரியா சாய் பல்லவி படப்பிடிப்பின்போது முரட்டுத்தனமாக நடந்து எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு சீன் போட்டதாக புகார் தெரிவித்தார்.

அதற்கு சாய் பல்லவி “நாகசவுரியா மட்டுமல்ல எந்த ஹீரோக்களுடனும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. படப்பிடிப்பு தளத்திற்கு வந்துவிட்டால் என் காட்சிகள் குறித்து மட்டுமே யோசிப்பேன்” எனத் தெரிவித்தார்.

மேலும், படித்த படிப்புக்கு டாக்டராக வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டால் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு சென்றுவிடுவேன் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here