வாய்ப்பு தேடிச் சென்று வெளியே தலை காட்ட முடியாமல் தவிக்கும் நடிகை..!

0
3548
Usha Jadhav Radhika Apte talk casting couch

(Usha Jadhav Radhika Apte talk casting couch)

”தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் இருவருடனும் படுக்கையை பகிர்ந்தால் தான் படவாய்ப்புக்கள் கிடைக்கும்” என தேசிய விருது பெற்ற நடிகை உஷா ஜாதவ் தெரிவித்துள்ளார்.

அதாவது, பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே, சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கிய நடிகை உஷா ஜாதவ், நடிகையாக முயற்சி செய்து வரும் 25 வயது பெண் ஆகியோர் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பிபிசி ஆவண படத்தில் பேசியுள்ளனர்.

மேலும் அந்த ஆவண படத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது.. :-

மக்கள் சிலரை கடவுள் போன்று பார்ப்பதுடன், அவர்கள் அதிகாரம் மிக்கவர்களாக இருப்பதால் நான் அவர்களை பற்றி புகார் தெரிவித்தால் என்னை யார் நம்புவார்கள் அல்லது என் கெரியர் பாதிக்கப்படும் என்று நடிகைகள் பயப்படுகிறார்கள் என்கிறார் ராதிகா ஆப்தே.

இந்நிலையில், திரையுலகில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது சர்வ சாதாரணம். பட வாய்ப்புக்கு பதிலுக்கு நீங்கள் ஏதாவது தர வேண்டும் என்று என்னிடம் கூறினார்கள் என்று உஷா ஜாதவ் தெரிவித்துள்ளார்.

’அது என்ன ஏதாவது..? அப்படி என்றால் என்ன..? என்னிடம் பணம் இல்லையே’ என்றேன். அதற்கு அந்த நபர் ’இல்லை இல்லை பணம் இல்லை. நீங்கள் தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் அல்லது இருவடனும் படுக்கையை பகிர வேண்டும்’ என்றார் என உஷா கூறியுள்ளார்.

அத்துடன், நடிக்கும் ஆசையில் கிராமத்தில் இருந்து கிளம்பி மும்பை வந்த 25 வயது வளர்ந்து வரும் நடிகை ஒருவர் வாய்ப்பு தேடிச் சென்ற இடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். முதல் முறை மட்டும் அல்ல பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார்.

”ஒரு நடிகை செக்ஸ் வைத்துக் கொள்ள சந்தோஷப்பட வேண்டும் என்று காஸ்டிங் ஏஜென்ட் என்னிடம் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், அவர் என்னை கண்ட இடத்தில் தொட்டார், முத்தமிட்டார், ஆடைக்குள் கையை விட்டார்.

இது வேண்டாம் நிறுத்துங்கள் என்று நான் கூறியதற்கு சினிமா துறையில் இருக்க நீ சரிப்பட்டு வர மாட்டாய் என்று அந்த ஏஜென்ட் என்னிடம் தெரிவித்தார்” என 25 வயது நடிகை தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Usha Jadhav Radhika Apte talk casting couch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here