என்னையும் படுக்கைக்கு அழைத்தனர் : புலம்பித் தள்ளும் பிரபல நடிகை..!

0
824
Actress Anita open talks casting couch,Actress Anita open talks casting,Actress Anita open talks,Actress Anita open,Actress Anita

(Actress Anita open talks casting couch)

தற்போது திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படும் விடயம், சினிமாவில் வாய்ப்பு கிடைக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு அழைத்த பிரச்சனை தான்.

இந்நிலையில், நடிகை அனிதா தனக்கும் அந்த நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதாவது, மனோஜ் பாரதிராஜா நடித்த ”வருஷமெல்லாம் வசந்தம்” படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் அனிதா. அதையடுத்து அவர் விக்ரமின் ”சாமுராய்” படத்தில் நடித்தார்.

”சுக்ரன்” படத்திற்கு பிறகு அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது அவர் இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சினிமா துறையில் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது என்கிறார் அனிதா. நல்ல வேளை எனக்கு தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கிடைத்தார். நல்ல ஆரம்பம் இருந்தால் நல்ல பயணம் இருக்கும். இருப்பினும் போராடத் தான் செய்தேன் என்று அனிதா தெரிவித்துள்ளார்.

எனக்கும் தான் அது நடந்தது. நாம் சரியாக யோசித்து அந்த விஷயத்தில் இருந்து வெளியே வர வேண்டும். என்ன செய்ய, துறை அப்படி உள்ளது. ஆனால் தற்போது நிலைமை எவ்வளோ பரவாயில்லை. எங்கள் காலத்தில் எல்லாம் ரொம்ப மோசம். நான் சொல்வது தவறாக கூட இருக்கலாம் என்கிறார் அனிதா.

மேலும், படுக்கைக்கு அழைக்கப்படுவது குறித்து பாலிவுட் நடிகைகள் பேசி வரும் நிலையில் டிவி சீரியல்களில் நடித்து வரும் அனிதாவும் அதையே தெரிவித்துள்ளார்.

தற்போது நாகினி சீரியலின் 3-வது சீசனில் அனிதா பிசியாக உள்ளார். அனிதா விஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மூன்றாவது சீசன் ஜூன் மாதம் 2 ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Actress Anita open talks casting couch

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here