மனைவியை பிரிந்த பிரபல கிரிக்கெட் வீரர்!

0
481
Imran khan leave 3rd wife

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான, இம்ரான்கான், சமீபத்தில் புஷ்ரா மனேகா என்ற இளம்பெண்ணை 3வது முறையாக தனது 64 ஆவது வயதில் திருமணம் செய்து கொண்டார். புஷ்ரா மனேகாவும் ஏற்கனவே திருமணமானவர் என்பதுடன் அவருக்கு மகன் இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், இம்ரான்கான் தெஹ்ரிக்-இ-இன்சாப் என்ற அரசியல் கட்சியின் தலைவராவர்.Imran khan leave 3rd wife

இந் நிலையில் 3 ஆவது மனைவி புஷ்ராவும் இம்ரான்கானை பிரிந்து சென்றுவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இம்ரான்கான் வீட்டில் அதிகமாக நாய்கள் வளர்ப்பதாகவும், இந்த நாய்களால் புஷ்ராவுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளதாகவும், நாய்களை வீட்டை விட்டு விரட்டிவிட புஷ்ரா கூறியதற்கு இம்ரான்கான் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக புஷ்ரா, தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும், புஷ்ராவின் முதல் கணவர் மூலம் பிறந்த மகன் அடிக்கடி தாயை பார்க்க வருவது இம்ரான்கானுக்கு பிடிக்கவில்லை எனவும், இது விஷயமாகவும் இருவருக்குமிடையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இரண்டு திருமணத்தில் திருப்தி அடையாத இம்ரான்கானின் 3வது திருமணமும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதால் அவர் விரக்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here