திருடிய வாகனத்தை உரிமையாளரிடமே விற்க முயன்ற திருடர்!

0
176
thief tried sell stolen vehicle owner

சென்னையில் திருடிய இருசக்கர வாகனத்தை உரிமையாளரிடமே விற்க முயன்ற திருடர்களை பொதுமக்கள் பிடித்ததுடன், காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.thief tried sell stolen vehicle owner
திருவல்லிக்கேணி பெரிய தெருவைச் சேர்ந்த காமராஜின் இரு சக்கர வாகனத்தை 2 நாட்களுக்கு முன்னர் மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்ததுடன், பழைய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்க திருவல்லிக்கேணி பெல்ஸ் சாலைக்கு சென்றுள்ளார்.

அவர், பழைய வாகனம் வாங்கப் போன இடத்தில் தனது வாகனம் விற்க வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். வாகனத்தின் அருகே நின்றிருந்த இருவரிடம் சென்று விசாரித்தபோது, வாகனம் விற்பனைக்கு உள்ளதாக கூறி விலையை சொல்லியுள்ளனர்.

அப்போது, தன்னுடைய இருசக்கர வாகனம் எப்படி விற்பனைக்கு வந்தது என காமராஜ் கேள்வி எழுப்பியதை அடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர்.

இந்நிலையில், அருகிலிருந்தவர்கள் திருடர்களை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here