செக்க சிவந்த வானம் படக்குழுவின் அலட்சிய போக்கு : தன்னார்வலர்கள் கோபம்

0
514
Chekka Chivantha Vaanam Mani Ratnam crew Kovalam beach latest 

(Chekka Chivantha Vaanam Mani Ratnam crew Kovalam beach latest)

கோவளம் கடற்கரையில் படப்பிடிப்பு நடத்திய செக்கச் சிவந்த வானம் குழு கண்ணாடித் துண்டுகள் உள்ளிட்ட கூர்மையான பொருட்களை போட்டுவிட்டுச் சென்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடித்து வரும் படம் செச்கச் சிவந்த வானம். கடந்த வாரம் படப்பிடிப்பு கோவளம் கடற்கரையில் நடந்துள்ளது. விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

இத்தருணத்தில் பட பிடிப்பின் போது பாவித்த கண்ணாடி பொருட்கள் உடைந்த கண்ணாடி துண்டுகள் எல்லாவற்றையும் சுத்தம் செய்யாமல் படக்குழுவினர் அப்படியே விட்டு சென்று விட்டார்கள் .
இதனால் அங்கு வந்த மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளனர் .மலை போல் குவிந்து கிடந்த கண்ணாடி துண்டுகளை பார்த்த மக்கள் அது தொடர்பாக மெட்ராஸ் டாகிசிடம் கூறியபொழுது ஆட்களை அனுப்புகிறோம் என்று கூறி விட்டு அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை .

எனவே சமூக தன்னார்வலர்கள் இதனை சுத்தம் செய்தனர் .இதனால் மூன்று பேருக்கு கையில் காயமும் ஏற்பட்டுள்ளது .

மேலும் இதே போன்று  AR  முருகதாஸ் படகுழுவும் இது போன்ற செயலை செய்ததாகவும் கூரபடுகின்றது

இது தொடர்பாக மெட்ராஸ் டாகிஸ் எக்சிகியூட்டிவ் தயாரிப்பாளர் சிவா ஆனந்த் நாங்கள் எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் அங்கிருந்து கிளம்பும் முன்பு அந்த இடத்தை சுத்தம் செய்துவிடுவோம். கோவளம் கடற்கரையையும் சுத்தம் செய்துவிட்டு தான் வந்தோம். எங்கள் குழுவை சேர்ந்த 20 பேர் சுத்தம் செய்தனர். கண்ணாடித் துண்டுகள் கிடந்ததற்கு நாங்கள் பொறுப்பு அல்ல என கூறியுள்ளார் .

இருந்தாலும் யாரும் சுத்தம் செய்யாத காரணத்தாலும் படக்குழுவின் அலட்சிய போக்காலும் மக்கள் பெறும் கோவம் கொண்டுள்ளனர் .

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

எமது ஏனைய தளங்கள்

Keyword:Chekka Chivantha Vaanam Mani Ratnam crew Kovalam beach latest

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here