பட வாய்பிற்காக படுக்கைக்கு சென்றே தான் ஆகவேண்டுமா ??: ஐஸ்வர்யா ராய் விளக்கம்

0
194
Aishwarya Rai talk sexual harassment cinema latest gossip
Source by:India.com

(Aishwarya Rai talk sexual harassment cinema latest gossip )

திரையுலகில் தொடர்ந்தும் படுக்கைக்கு அழைப்பது தொடர்பாக சர்ச்சைகள் வெடித்து வரும் நிலையில் ,ஒவ்வொரு நடிகைகளாக தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளியில் சொல்லி கொண்டு இருகின்றார்கள்.

இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் படுக்கைக்கு அழைப்பது குறித்து தனது கருத்தை கூறியுள்ளார் .

நடிகைகளுக்கு சம்பளம் குறைவாக தருகிறார்கள் என்று நினைத்தால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூற வேண்டும். சிலர் முடியாது என்கிறார்கள், சிலர் ஒப்புக் கொள்கிறார்கள்.

சம்பள பாகுபாடு, வேலை இடத்தில் பாலியல் தொல்லை ஆகியவற்றை எதிர்த்து ஹாலிவுட்டில் இயக்குனர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் என்று 81 பெண்கள் சேர்ந்து #MeToo இயக்கத்தில் பங்கு கொண்டுள்ளனர். அது பாராட்டுக்குரியது. அதில் நானும் சேர விரும்புகிறேன்.

கடவுளின் அருளால் இதுவரை நான் பட வாய்ப்புக்காக படுக்கை பிரச்சனையை சந்தித்தது இல்லை. நான் சினிமாவுக்கு புதிது அல்ல. ஆனால் என் கதை வேறு. சீனியர்களும், சக நடிகைகளும் தங்களுக்கு நடந்தது பற்றி பேசும் போது நான் காதை பொத்திக் கொண்டு இருக்க முடியாது.

நான் கேன்ஸ் திரைப்பட விழாவில் அணியும் உடைகள், மேக்கப்பிற்காக பலர் கிண்டல் செய்கிறார்கள். அன்பு அதிகம் கிடைப்பதால் கேலி கிண்டலை கண்டுகொள்வது இல்லை. எனக்கு பயம் என்பதே கிடையாது என்கிறார் ஐஸ்வர்யா ராய்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Aishwarya Rai talk sexual harassment cinema latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here