கால்கள் இழந்த நிலையில் 70 வயதில் சிகரம் தொட்ட சாதனை மனிதர்

0
38
China old man reached Everest Mount latest gossip
photo source by:www.nytimes.com

(China old man reached Everest Mount latest gossip )

ஊணமேன்பது உடலுக்கு தான் மனதுக்கு இல்லை . தன்னமிக்கையுடன் செயற்பட்டால் முடியாத காரியம் எதுவும் இல்லை .இதனை சீனாவை சேர்ந்த முதியவர் ஒருவர் நிருபித்து இருகின்றார் .

சீனாவைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், தனது இரண்டு கால்களை இழந்த நிலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

சீனாவைச் சேர்ந்த 70 வயது முதியவர் சியா போயு. மலையேற்று வீரரான இவர், கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் தனது 2 கால்களையும் இழந்தார்.

இந்நிலையில், சியா போயு தற்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி அதன் உச்சியை அடைந்துள்ளார். இதன்மூலம், இரண்டு கால்கள் இல்லாத நிலையில் உலகின் மிக உயரமான சிகரத்தை அடைந்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதனை நேபாளத்தின் சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சியா போயுவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:China old man reached Everest Mount latest gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here