பாலிவூட் நடிகையுடன் ஊர் சுற்றும் KL ராகுல் :வைரலாகும் புகைப்படங்கள்

0
258

(Indian Cricket Player KL Rahul Dating Nidhhi Agerwal latest Gossip )

இந்திய அணியின் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் கே.எல்.ராஹுல், மொடல் அழகியும், பொலிவூட் நடிகையுமான நிதி அகர்வாலுடன் இரவு விருந்துக்கு சென்று புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் கே.எல்.ராஹுல் இம்முறை ஐ.பி.எல். தொடரில் சிறந்த துடுப்பாட்ட வீரராக வலம் வந்திருந்தார். இவர் 14 போட்டிகளில் 659 ஓட்டங்களை குவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் பொலிவூட் நடிகையான நிதி அகர்வாலுடன், கே.எல்.ராஹுல் டேட்டிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தளங்களில் வைரலாகியுள்ளன.

இந்த புகைப்படங்கள சமுகவலைத்தளங்களை பகிர்ந்துள்ள இணையவாசிகள், அடுத்த பொலிவூட்-கிரிக்கெட் ஜோடி இவர்கள்தான் என கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

ராஹுல் தென்னாபிரிக்க அணிக்கெதிரான தொடரில் வாய்ப்பு கிடைக்காமல் வெளியேறிய நிலையில், ஐ.பி.எல். தொடரில் அதிரடி காட்டி மீண்டும் இங்கிலாந்து அணிக்கெதிரான மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட தொடருக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியாகியுள்ள புகைப்படங்கள்

Photo Source By :www.timesnownews.com
Photo Source By :www.timesnownews.com
Photo Source By :www.timesnownews.com
Photo Source By :www.timesnownews.com

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Indian Cricket Player KL Rahul Dating Nidhhi Agerwal latest Gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here