அரசியலில் களமிறங்கும் வரலட்சுமி : இவங்களுமா ??

0
160
Varalaxmi Sarathkumar Enter Political Latest Gossip 

தமிழ் சினிமாவில் தற்போதைய காலம் வாரிசு நடிகைகளுக்கான காலம் தமது பெற்றோரின் செல்வாக்கை பயன்படுத்தி சினிமாவில் நுழைந்து கொடிகட்டி பறகின்றார்கள் .அந்த வரிசையில் வந்தவர் தான் வரலட்சுமி.(Varalaxmi Sarathkumar Enter Political Latest Gossip )

சரத்குமாரின்  முதல் மனைவியின் மகள் வரலட்சுமி தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து வருகிறார். நாயகிக்கான சரியான வாய்ப்பு அவருக்கு இன்னும் ஏற்படவில்லை என்றாலும் முக்கிய கதாபாத்திரமாக நடித்து வெற்றி பெற்றவர்

தொடர்ந்து, சமூக பணிகளிலும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். சினிமாத்துறையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தவிர்க்க சேவ் சக்தி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். சமூகத்தில் பாலியல் பிரச்சனைக்கு எதிராக தனது கருத்தை தொடர்ந்து பதிவு செய்து வருபவர். சமீபத்தில் தான் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் என கூறி இருந்தார்.

Varalaxmi Sarathkumar Enter Political Latest Gossip 
Photo source :Google

இந்நிலையில், வரலட்சுமி பாஜகவில் இணைந்து விட்டதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. பாஜக கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் இந்தியா முழுக்க இருக்கும் பிரபலங்களை சென்று நேரில் சந்தித்து பேசி வருகிறார்.

அதன்படி, வரலட்சுமியை சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது, எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி வருவதாக வரலட்சுமி தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து, ”முரளிதரவுடன் நடந்த சந்திப்பில் பாஜக இந்தியாவில் பெண்கள் பாதுகாப்புக்காக செய்ய இருக்கும் மாற்றங்கள் குறித்து பேசினோம்.

எங்கள் தரப்பு கருத்துக்களையும் மோடி கேட்க இருப்பதாக அவர் தெரிவித்தார். பாஜகவில் நான் சேர்ந்ததாக கூறுவது முழுக்க முழுக்க வதந்தி. நான் எந்த கட்சியிலும் இல்லை.” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Varalaxmi Sarathkumar Enter Political Latest Gossip

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here