நடிகர் விஜய்யை பாராட்டிய நாமல் ராஜபக்ச

0
544
Namal rajapaksa apprised actor vijay,Srilanka Former president son ,Naamal rajapaksa ,Naamal rajapaksa ,Tamil actor vijay

(Namal rajapaksa apprised actor vijay)

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம்தான் அண்மையில் வெளியாகி பிரமாண்ட வசூலைக் குவித்த திரைப்படம். ரசிகர்களின் ஆதரவோடு பெரும் வெற்றியைப் பெற்றது மெர்சல். திரையுலகினர், விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றது மெர்சல் திரைப்படம். மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த வசனங்களால் சர்ச்சைக்கு உள்ளானது. பா.ஜ.க-வினர் காட்சிகளை நீக்கச்சொல்லி போராட்டங்களையும் நடத்தினர்.

பல எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றிபெற்ற மெர்சல் படத்தை தற்போது ஒரு பிரபலம் பாராட்டியுள்ளார். இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷேவின் மகன் நமல் ராஜபக்‌ஷே சமீபத்தில் மெர்சல் படத்தைப் பார்த்துள்ளார்

மெர்சல்’ படம் பார்த்த நமல் ராஜபக்‌ஷே, “இந்தப் படம் எல்லைகளைத் தாண்டி முக்கியமான சமூகப் பிரச்னைகளைப் பேசியிருக்கிறது. விஜய் சிறப்பாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சூப்பராக வந்திருக்கிறது” என தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.

Related news :

Our Other Websites :

Keyword:Namal rajapaksa apprised actor vijay

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here