நட்சத்திர விழாவால் பிரபல நடிகருக்கு வந்த சோதனை!

0
128
Malaysia Grand Natchathira Vizha-2018 Famous Actor Injured

(Malaysia Grand Natchathira Vizha-2018 Famous Actor Injured)

நட்சத்திர விழாவில் நடத்தப்பட்ட கால்பந்து போட்டியின் போது காயமடைந்த நடிகர் ஆரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திர கலை விழா மலேசியாவில் கோலகலமாக நடைபெற்று வருகிறது.

இதில் நடிகர் விஜய், அஜித்தை தவிர மற்ற சினிமா பிரபலங்கள் அனைவரும் பங்கேற்றுள்ளனர்.

Image result for Malaysia Grand Natchathira Vizha-2018

இந்நிலையில் விழாவின் ஒரு பகுதியாக சினிமா நட்சத்திரங்களிடையேயான கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டி நடத்தப்பட்டது.

இதில் கால்பந்து போட்டியின் போது நடிகர் ஆரிக்கு எதிர்பாராத விதமாக காலின் முட்டியில் பயங்கரமான அடி விழுந்தது.

இதனால் மைதானத்திலேயே விழுந்து வலியில் துடித்த நடிகர் ஆரி-யை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. தற்போது, வலி குறைந்து நலமுடன் உள்ளார் நடிகர் ஆரி.

இந்த விழாவில் பங்கேற்க மலேசியா சென்ற நடிகர் ஜெயம் ரவியும் கடும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here