ரஜினி காந்தின் ஆன்மிக அரசியலுக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் ஆதரவு

0
231
Rajinikanth political entry support northern minister C. V. Vigneswaran

(Rajinikanth political entry support northern minister C. V. Vigneswaran)

ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் பிரவேசத்துக்கு தான் எப்போதும் ஆதரவு அளிப்பேன் என்று இலங்கை வடக்கு மாகாண முதல்-மந்திரி விக்னேஸ்வரன் கூறினார்.

இலங்கையில் உள்ள வடக்கு மாகாணத்துக்கு முதல்-மந்திரியாக இருப்பவர் விக்னேஸ்வரன். யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண கவர்னர் அலுவலகத்தில் தேசிய மற்றும் மாவட்ட அளவிலான தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க விக்னேஸ்வரன் வந்தார்.

அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் பிரவேசத்துக்கு தான் எப்போதும் ஆதரவு அளிப்பேன் என்றார்.

முன்னதாக இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனும், எம்.பி.யுமான நமல் ராஜபக்சே, ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்துக்கு இலங்கையில் இருந்து தன்னுடைய முதல் ஆதரவையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள் 

Keyword:Rajinikanth political entry support northern minister C. V. Vigneswaran

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here