இரசிகர்கள் காலில் விழுந்த நடிகர் சூர்யா!

0
120
Actor Surya Falls Down Fans Feet Shocking Moment

(Actor Surya Falls Down Fans Feet Shocking Moment)

நடிகர் சூர்யா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது பேசிய நடிகர் சூர்யா, “தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இப்படத்துக்காக கேரளா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு பயணம் செய்த அனுபவம் சுவையானது. அனிருத்தின் பாடல்கள் இப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது” என்றார்.

அப்போது நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் சூர்யாவின் ரசிகர்கள் 4, 5 பேர் மட்டும் மேடைக்கு வருமாறு அழைத்தார்.

அதனை ஏற்று மேடைக்கு வந்த ரசிகர்கள் சூர்யாவின் காலில் விழுந்தனர்.

பதிலுக்கு சூர்யாவும் ரசிகர்கள் காலில் விழ அதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் ‘தலைவா.. தலைவா..’ என நெகிழ்ச்சியுடன் கோஷமிட்டனர்.

யாரும் காலில் விழக் கூடாது என்பதற்காக சூர்யா அப்படி செய்திருக்கிறார்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here