வதந்தி பரப்பிய ஈழ தமிழரால் கிளம்பியுள்ள சர்ச்சை!

0
78
Sri Lanka Tamil Man Spread Rumor News Getting Viral

(Sri Lanka Tamil Man Spread Rumor News Getting Viral)

இலங்கை , யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் விளையாட்டு தனமாக பேஸ்புக் இல் பரப்பிய வதந்தி காரணமாக பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

சிரியாவில் நடைபெறும் யுத்தத்தில் மாட்டியிருக்கும் மக்களை மீட்க கனடா பிரதமர் ஈழ தமிழ் விமானி ஒருவரை அங்கு அனுப்பி அகதிகளை மீட்டதாக இவர் கட்டி விட்ட கதை பெரும் அளவில் சமுக வலைத்தளங்களில் பரவியதால் பெருமளவு மக்கள் அதை உண்மையென்றே நம்பிகொண்டனர்.

அதுமட்டுமன்றி , விமானத்தின் மேலதிக எரிபொருளை வெளியே கொட்டி 150 பயணிகள் பயணம் செய்யும் விமானத்தில் மேலும் 13 பேரை விமானி ஏற்றிக்கொண்டதாகவும் , இதற்கு அடுத்த கட்டமாக 25000 பேரை ஏற்றிவரக்கூடிய விமானத்தில் சென்று அகதிகளை ஒரேயடியாக கனடாவுக்கு கண்டு செல்லவுள்ளார் எனவும் கதையை காட்டியுள்ளார் இந்த நபர்.

இவரின் இந்த விளையாட்டுதனத்தை உண்மையென்று நம்பிய மக்கள் அதனை அதிகம் ஷேர் செய்துள்ளனர். அதுமட்டுமன்றி சில பிரபல ஊடகங்களும் இதை ஒரு செய்தியாக பிரசுரித்து கொண்டனர்.

இதனால் சமுகவலைத்தளங்கள் மற்றும் ஊடக பரப்பில் பெரும் குழப்பம் நிலவி வருகின்றது.

மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும் இது போன்ற செயட்பாடுகளுக்கு பெருமளவானோர் தமது கண்டனங்களை தெரிவித்துவருகின்றார்கள்.

இவர் ஏற்கனவே இது போன்று பல வதந்திகளை பரப்பியவர் என அறியப்பட்டுள்ளார்.

மக்கள் இது போன்ற வதந்தி பரப்புவோர் தொடர்பில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என சில ஊடக பிரபலங்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here