குடும்ப வன்முறைகளினாலே இலங்கையில் அதிக பெண்கள் மரணம் : ஐநா ஆய்வு

0
114
SriLankan woman mostly murder family problems

(SriLankan woman mostly murder family problems)

இலங்கையில் இடம்பெறும் பெண்கள் கொலை தொடர்பில் மூன்றில் ஒன்றுக்கு மேற்பட்டவை மிக நெருங்கிய குடும்ப உறவுகளால் ஏற்படும் வன்முறையினாலேயே என்று ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டுள்ள ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறான சம்பவங்களின் போது சம்பந்தப்பட்ட 60 சதவீத பெண்கள் நீதித்துறையின் உதவியை அல்லது சட்ட நடைமுறைக்கான விடயங்களை அணுகுவதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

SriLankan woman mostly murder family problems

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொடர்பான நிதியம் முதல்முறையாக இலங்கையில் மேற்கொண்ட இதுதொடர்பான ஆய்வில் இந்த விடயம் கண்டயறியப்பட்டுள்ளது.

பாலின அடிப்படையில் இடம்பெறும் இயற்கைக்கு மாறான உயிரிழப்பிற்கான பங்களிப்பு காரணங்களை கண்டறியும் நோக்கில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன் ஐக்கியநாடுகளின் நிதியமும் களனி பல்கலைக்கழக குழுவினருடனும் இது தொடர்பிலான கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றது.

இதில் இந்த நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Ms. Ritsu Nacken கலந்துகொண்டார்.

இந்த கலந்துரையாடலிற்கு களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க தலைமைதாங்கினார். பேராசிரியர் அனுருத்த எதிரிசிங்க முதன்மை ஆய்வாளரும் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தை சேர்ந்தவர். டொக்டர் சுபாங்கி ஹேரத் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர், சாவித்திரி குணசேகர கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப்பிரிவு பேராசிரியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

சன்னிலியோனுக்கு 3 குழந்தைகளா? அதிர்ச்சியில் இரசிகர்கள்!

கேவலமான கருத்துகளால் டுவிட்டரில் இருந்து நடிகையை துரத்திய நெட்டிசன்கள்!

நடிகையின் நாய்க்குட்டியை கூட விட்டு வைக்காத இன்ஸ்டாகிராம் வாசிகள்

அரசியல் விமர்சகர்களுக்கு தடாலடி கொடுத்த ரஜனி!

ஆப்பிள் போனால் வந்த வினை : வீடே பற்றி எரிந்த சம்பவம்

எமது ஏனைய தளங்கள்

keyword:SriLankan woman mostly murder family problems

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here