முகமது ஷமி தொடர்பாக அவரின் மனைவி வைத்த ஆபாச குற்றச்சாட்டு : டுவிட்டரில் கருத்து கூறிய ஷமி

0
120
Mohammed Shami open talk wife complaint today latest

(Mohammed Shami open talk wife complaint today latest)
எனக்கு எதிராக சதி நடக்கிறது என்று கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தெரிவித்துள்ளார். தன்னை கொடுமைப்படுத்தியதாக மனைவி குற்றம்சாட்டிய நிலையில் ஷமி இவ்வாறு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக உள்ளவர் முமகது ஷமி. இவருக்கும் ஹசின் ஜகான் என்ற பெண்ணுக்கும் 2014ல் திருமணமானது. தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், இவர்கள் இல்லற வாழ்க்கையில் திடீரென புயல் வீசியுள்ளது.

Mohammed Shami open talk wife complaint today latest

ஹசின் ஜகான் தனது பேஸ்புக் பக்கத்தில், முகமது ஷமி பல பெண்களுடன் வாட்ஸ்அப், பேஸ்புக்கில் ஆபாசமாக சாட் செய்ததை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், முகமது ஷமி மற்றும் அவர் குடும்பத்தார் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் பேட்டியொன்றில் அவர் தெரிவித்தார்

இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், தியேதர் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட தரம்சாலா சென்றுள்ள ஷமி, அங்கிருந்தபடி டுவிட்டரில் இந்த புகார் பற்றி விளக்கம் அளித்துள்ளார். ஹிந்தியில் படிக்கும் வகையில் ஆங்கிலத்தில் அவர் டைப் செய்துள்ளார். அதன் தமிழாக்கம் இதுதான்.

Mohammed Shami open talk wife complaint today latest

எனது சொந்த வாழ்க்கை குறித்த குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யானவை. மிகப்பெரிய சதி எனக்கு எதிராக உள்ளது. எனது புகழை கெடுக்க நடக்கும் முயற்சி இது. எனது விளையாட்டை சீர்குலைக்கும் முயற்சியும் கூட. இவ்வாறு ஷமி தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஷமி சாட்டிங் என கூறி ஸ்க்ரீன் ஷாட்டுகளை வெளியிட்ட பேஸ்புக் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளது. ஷமி சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறை கிடையாது. கடந்த ஜூலையில் தனது வீட்டுக்கு அருகே வைத்து 3 பேரால் ஷமி தாக்கப்பட்டார். பார்க்கிங் தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டிருந்தது.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Mohammed Shami open talk wife complaint today latest

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here