இலங்கையில் சமுகவலைத்தள தடையால் திக்குமுக்காடும் பாவனையாளர்கள்!

0
91
Sri Lanka Government Temporarily Banned Social Media

(Sri Lanka Government Temporarily Banned Social Media)

இலங்கையின் கண்டி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் இடம்பெற்றுவரும் கலவரத்தை கட்டுப்படுத்த இலங்கையில் பேஸ்புக் , டுவிட்டேர் உள்ளிட்ட சமுக வலைத்தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

வன்முறை சம்பவங்கள் நாட்டின் பிறபகுதிகளுக்கு பரவுவதை தடுக்கும் வகையில் நேற்றிலிருந்து பத்து நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலம் வதந்திகள் பரவுவதால் வன்முறை மேலும் தீவிரமடையும் சூழல் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு இலங்கை முழுவதும் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட தளங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கண்டியை சுற்றியுள்ள பகுதிகளில் மொபைல் சேவைக்கும் தடை விதித்து இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த திடீர் முடக்கத்தால் பேஸ்புக் , டுவிட்டர் பாவனையாளர்கள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர். தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்ட காரணத்தால் பலர் மன ரீதியில் பாதிப்படைந்துள்ளனர்.

என்றாலும் பலர் இந்த தற்காலிக தடையை கூட தாங்க முடியாதவர்களாக ப்ரொக்சி மென்பொருட்கள் மூலம் இவற்றை கள்ளத்தனமாக பாவித்து வருகின்றார்கள்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here