கண்டி கலவரத்துக்கு எதிராக குரல்கொடுக்கும் இலங்கை கிரிக்கெட் பிரபலங்கள்!

0
83
Kandy Riots Cricket Players Statements Against Racism

(Kandy Riots Cricket Players Statements Against Racism)

இலங்கையில் உள்ள கண்டி மாவட்டத்தில் புத்த மதத்தினருக்கும் சிறுபான்மை இனத்தவரான இஸ்லாமிய மத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதன் காரணமாக கண்டியில் பல தடவைகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதே போன்று பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடந்து உள்ளன.

3-வது நாளாக இந்த நெருக்கடி நிலை நீடிக்கிறது. இலங்கை முழுவதும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.

இந்நிலையில், இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்று கிரிக்கெட் நட்சத்திரங்களான ஜெயசூர்யா, குமார் சங்கக்காரா, மகிலா ஜெயவர்தனே ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனது அடுத்த தலைமுறை உள்நாட்டு போருக்குள் தள்ளப்படுவதை தான் விரும்பவில்லை என்று மஹில ஜயவர்த்தன கூறியுள்ளார்.

அதேபோல், சமீபத்திய வன்செயல்களை தான் கடுமையாக கண்டிப்பதுடன், அதற்கு காரணமானவர்கள் நீதிமுன் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

சங்ககாரா கூறியிருப்பதாவது, நாம் அனைவரும் ஒரே நாடு மற்றும் ஒரே மக்கள் என்ற கொள்கையை சேர்ந்தவர்கள். வன்முறை மற்றும் இனவெறி தாக்குதலுக்கு இங்கு இடமில்லை. வன்முறைக்கு எதிராக நாம் அனைவரும் ஒற்றுமையாக நிற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here