பிகினியில் ராதிகா ஆப்தே : இரசிகர்கள் கிண்டலுக்கு சரியான பதிலடி

0
198
Radhika Apte bikini pose goa

(Radhika Apte bikini pose goa)

பிகினி அணிந்ததற்காக தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ராதிகா ஆப்தே. நடிகை ராதிகா ஆப்தே தனது நண்பர்களுடன் கோவா சென்றார். கோவா கடற்கரையில் பிகினி அணிந்து எடுத்த புகைப்படத்தை ராதிகா சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்து பலரும் அவரை கிண்டல் செய்தனர், கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இது குறித்து ராதிகா ஆப்தே கூறியிருப்பதாவது,

Radhika Apte bikini pose goa

என்னை கிண்டல் செய்கிறார்கள் என்று ஒருவர் சொல்லும் வரை அது எனக்கு தெரியாது. கடற்கரைக்கு சேலை கட்டிக்கிட்டா முடியும்? எனக்கு அவர்களை யார் என்று தெரியாது, அதனால் அவர்களை கண்டுகொள்ளத் தேவையில்லை.

பேட்மேன் படத்தை பார்த்துவிட்டு என் நடிப்பை பாராட்டி வந்த விமர்சனங்கள் அனைத்தையும் நான் படிக்கவில்லை. ஆனால் மக்களுக்கு என் நடிப்பு பிடிக்கும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும்

பேட்மேன் மக்களை கவரும் நல்ல படம். நான் கிராமத்து பெண் கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஆனால் அவை அனைத்தும் வித்தியாசமானவை ஆகும்.

ஒரு கலைஞராக என் வேலை எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு நம்பிக்கை இல்லாத ஒன்றை நான் செய்ய மாட்டேன். இயக்குனர் கதை சொல்லும் போது அது பிடித்தால் மட்டுமே நடிக்கிறேன் என்றார் ராதிகா ஆப்தே.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

Keyword:Radhika Apte bikini pose goa

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here