ஸ்ரீதேவி 16 ஆம் நாள் சடங்கில் தல அஜித் மற்றும் ஷாலினி!

0
84
Actor Ajith Participated Sri Devi 16th Day Function

(Actor Ajith Participated Sri Devi 16th Day Function)

முதல் பெண் சூப்பர் ஸ்டார் நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் திடீரென துபாயில் எதிர்பாராத வகையில் மரணம் அடைந்தார்.

அவரது மரணம் இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியது. மும்பையில் அவரது இறுதிச்சடங்கில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர்

இந்த நிலையில் சென்னை சிஐடி நகரில் உள்ள இல்லத்தில் ஸ்ரீதேவிக்கு நேற்று 16-ம் நாள் சடங்கு நடத்தப்பட்டது.

இந்த சடங்கில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே ஸ்ரீதேவிக்கு இறுதியஞ்சலி செலுத்த ஷாலினி மும்பை சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

ஸ்ரீதேவியுடன் ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டும் அஜித் நடித்திருந்தாலும் இருவரும் குடும்ப அளவில் நெருக்கமானவர்கள்.

அஜித் குறித்து பெருமையாக ஸ்ரீதேவி பல பேட்டிகளில் கூறியுள்ளார். அஜித், ஷாலினி இருவரும் ஸ்ரீதேவியிடம் குறைந்தபட்சம் வாரம் ஒருமுறை போனில் நலம் விசாரித்து கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எமது Tamilgossip.com ஏனைய பிற செய்திகள்

எமது ஏனைய தளங்கள்

  • ***********************************************

    நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

     

    Tamilworldnews.com Logo

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here